×

மாநல்லூர் ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: தீர்மானம் நிறைவேற்றம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சியில் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாநல்லூர் பகுதியில் அமைவருக்கும் புதிய சிப்காட் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் அனைவரும் புறக்கணித்து வெளியேறினார்கள். இதனால், 61 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாநல்லூர் ஊராட்சியில், மட்டும் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. அதிகாரிகள் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். மேலும் சானாபுதூர், மாதர்பக்கம், பாதிரிவேடு, சூரப்பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளிலும் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று துணை பிடிஒ முருகையன் தலைமையிலும் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் முன்னிலையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட அப்பகுதி மக்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஊராட்சி கணக்குகள் குறித்தும், ஊராட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் விவசாய நிலங்களையும் அரசு நிலங்களையும் கையகப்படுத்தி அமையவருக்கும் மாநல்லூர் – சூரப்பூண்டி சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

The post மாநல்லூர் ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chipkat ,Manallur Currakshi ,Gummhipundi ,Independence Day ,Manellur ,Gummdipundi Union ,Manallur ,
× RELATED திமுக பெண் நிர்வாகி குறித்து ஆபாச பதிவு பாமக பிரமுகர் கைது